"காலில் விழ வந்த விஜய்".

29.10.2025 14:24:26

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நடந்த நிகழ்வு குறித்த தகவல்களை 2 குழந்தைகளை இழந்த தந்தை பகிர்ந்துள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூரில் சந்திக்காமல், சென்னைக்கு அழைத்து வந்து சந்தித்தது விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் அங்கு நடந்தது குறித்து தனது குழந்தைகளை இழந்த தந்தை ஒருவர் பேசியுள்ளார்.

இதில் பேசிய அவர், "விஜய் போட்டோவை கட்டிப்பிடித்து என் செல்லங்களைபறிகொடுத்து விட்டேனே என 15 நிமிடங்களுக்கு என அழுதார். போட்டோவை அவர் விடவே இல்லை.

அதன் பின்னர் நான் அவரிடமிருந்து போட்டோவை வாங்கியதும் என்னை கட்டிப்பிடித்து அழுதார். என் காலில் விழ வந்தார். ஐயோ விடுங்க சார் உங்க மேல எந்த தப்புமில்லை. விஜய் அன்று நாள் முழுவதும் சாப்பிடவில்லை.

அதன் பின்னர் நான் அவருக்கு தைரியம் கூறிவிட்டு வந்தேன். பறிகொடுத்தது நான். நீங்க எதற்கும் பயப்பட வேண்டாம். தைரியமா நீங்கள் இதில் இருந்து மீண்டும் வர வேண்டும் என கூறினேன்.

இதில் இருந்து நீங்கள் எழுந்து வர வேண்டும். நாடே உங்களை திரும்பி பார்க்கிறது. நீங்கள் இதில் இருந்து வெளிய வாங்க என நான் ஆறுதல் கூறி விட்டு வந்தேன். தன்னால இத்தனை குழந்தைகள் இறந்துவிட்டதே என்ற மனநிலையில் உள்ளார் " என பேசினார்.