பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் நடந்த கொடூரம்!

01.01.2026 13:46:07

கிறிஸ்துமஸ் தினத்தன்று மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 63 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று பிரித்தானியாவின் வில்ட்ஷயரில் உள்ள டெவைசஸ் நகரில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தில் 80 வயது தமாரா குளோவ்கா என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஸ்டெபானியா குளோவ்கா என்ற 63 வயது பெண் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட ஸ்டெபானியா குளோவ்கா கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்விண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுத்தப்பட்டார்.

பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் அவர் விசாரணைக்காக கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த அமர்வில் ஸ்டெபானியா குளோவ்கா ஆஜர் படுத்தப்படவில்லை. தற்போதைய நீதிமன்ற உத்தரவின் படி, ஸ்டெபானியா குளோவ்கா தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டெபானியா குளோவ்கா தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 2026-ல் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.