ஜனாதிபதி ஆணைக்குழுவின் அரசியல் பழிவாங்கல் குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு !

09.03.2021 07:40:39

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இன்று(செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.