அரசியலில் அதிரடி திருப்பம்!.
அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் தொடர்ந்து பாஜகவின் ஆதரவாளராகவே அவர் செயல்பட்டு வந்தார்.. டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரிடம் நெருக்கம் காட்டினார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது நடக்கவே நடக்காது என ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் சொல்லி வந்தார்.
பாஜக தலைமை மூலம் மீண்டும் அதிமுகவில் இணையும் முயற்சிகளை ஓபிஎஸ் தொடர்ந்து செய்து வந்தார். பாஜக பலமுறை பேசியும் பன்னீரை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்க அது நடக்கவில்லை.
எனவே, போடிநாயக்கனூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஓபிஎஸ் வெற்றிபெற்றார். 2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை பாஜகவின் உதவியால் எப்படியாவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட வேண்டும் என்கிற முயற்சிகளை ஓபிஎஸ் எடுத்தார். அதிமுகவில் இணைய வேண்டும் அல்லது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை அவரின் நிலைப்பாடாக இருந்தது.. ஆனால் இதை பழனிச்சாமி ஏற்கவில்லை.
சமீபத்தில் டிடிவி தினகரன் அதிமுகவில் கூட்டணியில் இணைந்தார்.. நேற்று கூட செய்தியாளிடம் பேசிய டிடிவி தினகரன் ‘ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ்ஐ கொண்டு வரும் முயற்சியில் பாஜக வெற்றிபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. பழனிச்சாமியும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.. அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுக சின்னமான குக்கர் சின்னத்தில் ஓபிஎஸை போட்டியிட வைக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.