நடிகர் ஜெயராமுக்கு கொள்ளை வழக்கில் நோட்டீஸ்!

07.02.2026 14:11:57

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டு முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்பட 12 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் அடுத்தடுத்து கைது செய்தனர்.

இந்த வழக்கு குறித்து கொச்சி அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகுமாறு மலையாள பிரபல நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மேலும் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

 

அவர் சமீபத்தில் ஜாமின் பெற்று திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.