சிதம்பரம் கோவிலில் தெப்ப உற்சவம்.

15.06.2025 08:12:26

சிதம்பரத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெப்ப உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் வடக்கு மெயின் மெயின் ரோடு பெரிய அண்ணா குளம் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 56 ஆண்டுகளாக விமர்சியாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரம், வண்டி கேட், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கோவிலில் நடைபெற்றது. இதில் முதல் முறையாக கோவிலுக்கு அருகே உள்ள பெரிய அண்ணா குளத்தில் சாமி சிதம்பரம் நகரத்தின் நான்கு வீதிகளில் வீதியுலா முடிந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. இந்த தெப்ப உற்சவத்தில் குளத்தை 3 முறை தெப்பம் சுற்றி வந்த பிறகு பின்பு மீண்டும் சாமி சிலை கோவிலுக்கு மேல தாளம் முழங்க அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரத்தில் உள்ள ஞானப்பிரகாசம் குளத்தில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தெப்ப உற்சவம் மீண்டும் முதல் முறையாக நடராஜர் கோவில் சார்பாக நடைபெற்றது. இந்நிலையில் முதல் முறையாக பெரிய அண்ணா குளத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் ஆன்மீக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.