'ஒமைக்ரான்' அச்சுறுத்தலில் சீனா

10.01.2022 08:02:43

 சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.    இங்கு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளதால் அதற்குள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தலைநகர் பீஜிங்கிற்கு அருகில் உள்ள தியன்ஜின் பகுதியில் இரண்டு பேர் 'ஒமைக்ரான்' வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.