மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ஜீவன்!.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்ய ஹீரோவாக நடித்த காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவன். அதன்பின் சில படங்களில் வில்லனாக நடித்து வந்த ஜீவன் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார்.
இவரின் நெருப்பில் வெளியான திருட்டுப் பயலே திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
அதேபோல் செல்வா இயக்கத்தில் இவர் நடித்து வெளியான நான் அவனில்லை படமும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்த ஜீவன் ஒரு கட்டத்தில் திடீரென காணாமல் போனார். கடந்த பல வருடங்களாகவே இவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. மொத்தமாக சினிமாவை விட்டே விலகியிருந்தார். இந்நிலையில் இந்நிலையில்தான் அசோக்குமார் இயக்கத்தில் அர்ஜித் சங்கர், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் லவ்வர் பாய் படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் ஜீவன்.