புதிதாக வசாயிகளுடன் புதிதாக பேச்சு நடத்த வேண்டும்: ப.சிதம்பரம் யோசனை

21.01.2021 11:09:18

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய அரசு புதிதாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சிலேட்டில் புதிதாக எழுதுவதுபோல் தொடங்க வேண்டும். முன்னோக்கி செல்வதற்கு இதுதான் வழி.

என்ன செய்ய வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த காலத்தை ஒதுக்கி வைக்க மறுக்கும் அரசிடம் ஆக்கப்பூர்வமான முடிவை எப்படி எதிர்பார்க்க முடியும்?