சர்ச்சையில் சிக்கிய பிக்கு தொடர்பில் இதுவே என் நிலைப்பாடு..!

10.07.2023 21:15:38

 

ஒரு சில துறவிகளின் தவறான செயல்களை பார்த்து ஒட்டுமொத்த பௌத்த துறவிகளையும் குற்றம் சொல்ல வேண்டாம் என தமிழ் பௌத்தரான பொகவந்தலாவே ராகுலஹிமி தெரிவித்துள்ளார்.

நவகமுவ பகுதியில் பௌத்த தேரர் ஒருவர் சமூக பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவே ராகுல ஹிமி தனது கருத்துக்களை பதிவிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டார்.

குறித்த காணொளி தொடர்பில் பலர் கருத்து தெரிவித்ததுடன் தவறான பதிவுகளை பதிவிட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.