கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நாடுகள் தீர்வை தர வேண்டும்!
|
சுண்டிக்குளம் பூனை தொடுவாய்யில் அப்பாவி மீனவர்கள் என்று தெரிந்தும் அவர்களை இலங்கை கடற்படை திட்டமிட்டு படுகொலை செய்தது என்றும் அது அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஒரு அங்கம் என்றும் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்துள்ளார். |
|
அவர் சுண்டிகுளம் பூனை தொடுவாயில் படுகொலை செய்யப்பட்ட 10 அப்பாவி மீனவர்களில் 32 வது ஆண்டு நினைவேந்தல் நேற்று கட்டைக்காடு சென் மெரிஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒரு இனம் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டுமாக இருந்தால் அந்த இனத்தின்னுடைய வரலாறு கடத்தப்பட வேண்டும், அந்த வரலாற்று கடத்தல் நிகழ்வைத்தான் இன்று இந்த மைதானத்தில் செய்து கிண்டிருக்கின்றோம். 1994 ம் ஆண்டு எங்களுக்கு நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையின் ஒரு கட்டம், இலங்கை சுதந்திரம் அடைந்த நாளைலிருந்து இனப்படுகொலை நடந்தது 2009 ல் அது உச்சம் தொட்டது. இன்று அந்த இனப்படுகொலை வடிவம் மாற்றப்பட்டு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையாக தமிழர் தாயக பிரதேசங்களில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. வன ஜீவராசிகள் என்றும் இன்னும் இன்னும் பல்வேறு சட்டங்களை புகுத்தி சூறையாடுகின்ற வகையிலே அரச அங்கீகாரம் பெற்ற வகையிலே இந்த இனப்படுகொலை கள் எமது பிரதேசங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இன்று இந்த மைதானத்தில் இருக்கின்றவர்கள் 30 வயதுக்கு குறைந்தவர்கள். எமது தேசத்தில் நடந்த நடந்திருந்த துன்பியலை இனப்படுகொலையை அறிந்திராதவர்கள். இன்று அவர்களுக்குள்ளே பாரிய கேள்வி எழலாம். இன்று இலங்கையின் கடற்படை எங்களோடுதானே இருக்கின்றார்கள் என்று. இவர்களா இந்த செயலை செய்தார்கள் என்று. அன்பானவர்களே 1994 ம் ஆண்டு பூனை தொடுவாய் கடலிலே படுகொலை செய்யப்பட்ட நிகழ்விலே இருந்து தப்பியவர்களில் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருடன் நான் உரையாடினேன். அவர் புலம் பதிந்ததேசத்தில் இருக்கிறார். அப்பொழுது நான் அவரிடம் கேட்டேன் அந்த நிகழ்வை எனக்கு ஒருக்கா சொல்லுங்கோ என்ன நடந்தது என்று அப்பொழுது அவர் மிகவும் கனத்த இதயத்தோடு அழுது கொண்டவராக சொன்னார். நாங்கள் வழமை போன்று கட்டுமரத்தில் கடற்றொழிளுக்கு சென்றபோது கடற்படையினர் வந்து மீனை பெற்று சென்றனர். என்னோடு பேசிய நபர் சம்பவம் நடந்த அன்று சற்று தொலைவிலே கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது எங்கேயோ தூரத்தில் போய்க்கொண்டிருந்த இலங்கை கடற்படை சூட்டு வலுவுடைய படகு இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த போது கரையிலே தொழிலிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் முதலிலே மீன் வாங்க வந்தது போன்று கடற்படை வருகிறார்கள் என்று நினைத்திருக்க கூடும். இந்த இடத்திலே நான் எதை சட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றால் இந்த பாதக செயலை செய்த இலங்கை கடற்படைக்கு தெரியும் இவர்கள் அப்பாவி மீனவர்கள் என்று. இவர்கள் ஆயுதம் தாங்கிய நபர்கள் அல்ல. அவர்கள் நாளாந்த சீவியத்திற்காக இந்த கஸ்ரமான காலத்தில் கட்டுமரத்தில் அவர்கள் கையாலே தண்டு வலித்து அவர்கள் தங்களுடைய குடும்பத்தை வழி நடத்துவதற்காக, தங்களுடைய குடும்பத்தை கொண்டு செல்வதற்காக கடற்றொழிலில் ஈடுபட்டவர்கள் என்பதை இலங்கை கடற்படை நூற்றுக்கு நூறு வீதம் அறிந்திருந்தார்கள். எனவே இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு இனப்படுகொலை. இது ஒரு இனப்படுகொலையின் ஒரு அங்கம். நீங்கள் 1994 ம் ஆண்டில் பார்ப்பீர்களேயானால் தொடர்சியாக ஆண்டு முழுவதும் எமது தமிழர் தாயக பிரதேசங்களிலே பல இனப்படுகொலைகள் அரங்கேறியிருக்கின்றன. எனவே எங்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்கும் மட்டும் நாங்கள் உலகறிய எடுத்து செல்ல வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வை கொண்டு கடத்த வேண்டிய ஒரு பாரிய பொறுப்பை நாங்கள் பெற்றிருக்கின்றோம். எல்லாம் முடிந்து விட்டது என்று அல்ல. நாங்கள் முன்பை விட இப்போது ஒரு பயங்கரமான ஒரு சூழலில் இருக்கின்றோம். எனக்கு முன்பு பேசியவர்கள் பேசியது போல எமது இனத்தை அழிக்கின்ற வகையிலே தான் இந்த போதை பொருள் பாவனை இந்த மண்ணிலே புகுத்தப்பட்டது. அது ஒரு ஆயுதமாக கையாளபட்டது. இந்த இனத்தை சீரழிப்பதற்காக ஆனால் இன்று அது முழு இலங்கையிலும் வியாபித்திருக்கின்றது. ஒரு வரலாற்றிலே வாழுகின்ற மக்கள் நாங்கள் எங்களுடைய வரலாறுகளை மறந்து போகக்கூடாது. எங்களுடைய வரலாறுகளை மறந்து போவோமேயானால் எங்களுடைய இருப்பு கேள்விக்குறியாகிவிடும். அரசாங்கங்கள் மாறுகின்றதே தவிர அரசாங்கங்களின் தமிழ் மக்களிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கள் மாறியபாடில்லை. பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாமல் ஆக்குவோமென்று வந்தவர்கள் இன்று பயங்கரவாத தடைச் சட்டத்தைவிட மிக மோசமான ஒரு பயங்கர சட்டத்தை கொண்டுவர முழு முனைப்பு காட்டுகின்றனர். இவ்வாறாக ஒவ்வொரு அரசாங்கங்களும் எமது இனத்துக்கு எதிரான வேலைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் 2009 க்கு முன்னர் தமிழர்கள் மத்தியில் மிகவும் ஒற்றுமையாக இருந்தோம். உன்னத இலட்சியத்தை கொண்டவர்களாக் இருந்தோம், வாழ்வோடு இருந்தோம். ஆனால் இன்று கூறு போடப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் பிரிந்து பிரிந்து சிறிய சிறிய குடும்பங்களாக இருக்கின்றோம். எங்களுடைய ஊர்கள் பிரிக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகள் பிரிக்கப்படுகின்றன. எங்களுடைய சமூகங்கள் பிரிக்கப்படுகின்றது. இதெல்லாம் அரசாங்கத்தின் ஒரு பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் நான் இதை பார்க்கின்றேன். எனவே ஒன்றுபடுகின்ற போதுதான் ஒரு தேசம் விடுதலை பெறும், ஒன்று படுகின்ற போதுதான் எங்களுக்கு எதிரான அநியாயங்கங்களுக்கு நீதி கோர முடியும். நாங்கள் ஒன்று படுகின்றப்போதுvதான் நாங்கள் எங்களுக்கு நடைபெறுவது ஒரு இனப்படுகொலை, நடந்தது ஒரு இனப்படுகொலை, அரசு கட்டமைத்த ஒரு இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறகு என்பதை எகோபித்த குரலில் உலகறிய பறைசாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவே இந்த சிந்தனை ஓட்டங்கள் இளைய சமுதாயங்களுக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக பலவிதமான கைங்கரியகள் திரை மறைவிலே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே அன்பானவர்களே இந்த வலி சுமந்த நாளிலே நாங்கள் இருக்கின்ற பொழுது நாங்கள் எங்களுடைய உறவுகளை இழந்திருக்கின்றோம். பயங்கரங்களுக்குள் போய் கொண்டிருக்கின்றோம். அதெல்லாம் இல்லாமல் போக வேண்டுமென்றால் எங்களுக்கு நடந்த இனப் படுகொலைகளுக்கும், இப்போது நடந்துகொண்டு இருக்கின்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும், சர்வதேச நாடுகள் தலையிட்டு ஒரு தீர்வை தர வேண்டும். வடக்கு கிழக்கு எங்களுடைய தாயக பிரதேசம், நாங்கள் இந்த இனத்தின் பூர்வீக மக்கள், நாங்களும் சுய நிர்ணய உரிமை பெற்று வாழ வேண்டும். நாங்கள் எங்களுடைய பொருளாதாரத்தை நாங்களே நிர்ணயிக்க வேண்டும். எங்களை நாங்கள் ஆழவேண்டும் என்கின்ற சிந்தனை எங்களுக்குள்ளே புரயோடி நாங்கள் எல்லோரும் ஒன்று படடவர்களாக எல்லோரும் ஒரே இலட்சியத்தை கொண்டவர்களாக நடை பயணம் செய்வதற்கு இறந்த எங்களுடைய ஆதுமக்கள் அந்த வல்லமையை தரவேண்டும் என மேலும் தெரிவித்தார். |