அமெரிக்க மக்களால் ஸ்தம்பித்த கூகிள்!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கனடாவுக்கு குடியேறுவது குறித்து திரளான மக்கள் கூகிள் தேடுபொறியில் தகவல் திரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் கூகிள் வெளியிட்டுள்ள தகவலில், செவ்வாய்க்கிழமை இரவில் இருந்தே move to Canada என்ற வாசகம் மக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். |
தேர்தல் முடிவுகள் வெளிவர வெளிவர, கூகிள் தேடுபொறியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை பகல் 6 மணிக்கு இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கமலா ஹரிஸ் வெற்றியடைந்துள்ள Vermont, Maine, New Hampshire, Oregon மற்றும் Minnesota ஆகிய மாகாண மக்களே, மிக அதிகமாக கனடாவுக்கு குடியேறுவது எப்படி என கூகிள் தேடுபொறியில் தகவல் திரட்டியுள்ளனர். அத்துடன், சிலர் கனடாவில் வாழத் தகுந்த சிறந்த பகுதி எது என்றும் கனடாவுக்கான விசா பெறுவது எப்படி என்றும் தகவல் திரட்டியுள்ளனர். கனடா மட்டுமின்றி, சில அமெரிக்க மக்கள் அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, டென்மார்க் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் தொடர்பிலும் தகவல் திரட்டியுள்ளனர். தேர்தல் வெற்றிக்கு பின்னர், புலம்பெயர்தல் மற்றும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றில் கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |