மட்டக்களப்பில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி
23.10.2021 10:16:13
மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் கடமையாற்றிவந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி இன்று (23) உயிரிழந்துள்ளார்
மட்டக்களப்பு வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.