என்.டி.ஏவிடம் பேரம் பேசினாரா சீமான்?

21.01.2026 13:42:34

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. குறிப்பாக, சீமான் 70 தொகுதிகள் மற்றும் முதல்வர் பதவியை கோரிப் பேரம் பேசுவதாக பல 'யூடியூப்' அரசியல் விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர். சமீபத்தில் வலதுசாரி அமைப்பின் நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதே இந்த வதந்திகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இருப்பினும், இந்த தகவல்கள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமம்" என்று அவர் பலமுறை தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்தே போட்டியிடும் என்றும், 117 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 117 பெண் வேட்பாளர்களை களமிறக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், "நான் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளேன்; தேசிய கட்சிகளுடனோ அல்லது திராவிட கட்சிகளுடனோ ஒருபோதும் கைகோர்க்க மாட்டேன்" என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஏற்கனவே சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சூழலில், இத்தகைய '70 சீட்' வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரம் என்று அக்கட்சியினர் சாடுகின்றனர்.