சாவாகச்சேரி விபத்தில் முதியவர் பலி

06.10.2021 06:23:40

யாழ்.,தென்மராட்சி, சாவகச்சேரி நகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி சைக்கிளில் பயணித்த முதியவரை எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதியோரத்தில் தரித்திருந்த வாகனம் ஒன்றை முதியவர் கடந்து செல்ல முற்பட்டபோதே எதிரே வந்த வாகனம் மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சாவகச்சேரியைச் சேர்ந்த நடராசா பொன்னுச்சாமி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.