தாதாவாக நடிக்கும் வனிதா

13.01.2022 06:49:04

சினிமா வாய்ப்புள் இல்லாவிட்டாலும் இணையதளம் மூலம் தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் வனிதா விஜயகுமார். இதனாலேயே இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் ‛தில்லு இருந்தா போராடு' என்ற படத்தில் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வைரல் ஸ்டார் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

வனிதாவுடன் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா,யோகிபாபு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர், சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.