ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு!
ஐந்து புதிய தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
இதன்படி, கொரியக் குடியரசின் தூதுவராக கிம் யூன்-ஜங் (Kim Youn-Jung), சுவிட்சர்லாந்தின் தூதுவராக டேனியல் ஹுன் (Daniel Hunn), ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராக சில்வியா ஹார்ட்லீஃப் (Sylvia Hartleif) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எகிப்து அரபுக் குடியரசின் தூதுவராக அஹ்மட் எல்-சயீத் அப்தெல் ஹலீம் அமெர் ஹெலால் (Ahmed El-Sayed Abdel Halim Amer Helal), லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவராக விதாயா சாயவோங் (Vithaya Xayavong) ஆகியோரும் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
அத்துடன், நமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகராக அலெக்ஸ் எல். துகுஹுப்வேலே (Alex L. Tukuhupwele) மற்றும் சிங்கப்பூர் குடியரசின் உயர்ஸ்தானிகராக பெட்ரிக் டேனியல் (Patrick Daniel) ஆகியோரும் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
நற்சான்றுப் பத்திரங்களை ஏற்றுக்கொண்ட பின்னர், புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.