விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை
02.10.2021 09:12:34
நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான கலப்பின விதைகளை உற்பத்தி செய்வதற்காக பொது மற்றும் தனியார் துறைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஆண்டுதோறும் 28 வகையான விதைகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்காக அரசாங்கம் ஆண்டுக்கு 2000 மில்லியன் ரூபாய் செலவிடுவதாகவும் தெரியவந்தது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் விலை அதிகம் என்பதால் விவசாயிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
எனவே விதைகள் இறக்குமதியை நிறுத்த விவசாயத்துறையும் தனியார் துறையும் ஒப்புக்கொண்டதாகக் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே கூறினார்.