கொழும்பில் இன்று நீர்வெட்டு

16.10.2021 07:42:58

கொழும்பின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை (16) இரவு 8 மணிமுதல் 13 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமை 16 ஆம் திகதி இரவு 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிவரை 13 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.