"சிட்னி தாக்குதலுக்கு இதுதான் காரணம்".

17.12.2025 14:25:37

அவுஸ்திரேலியாவில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடு சம்பத்துக்கு பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பான முடிவை இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுத்ததே காரணம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சிட்னி நகரில் விடுமுறை நாள் கொண்டாட்டத்திற்காக அங்குள்ள கடற்கரைக்கு பொதுமக்கள் குவித்துள்ளனர். அப்போது திடீரென 2 மர்ம நபர்கள் பொதுமக்கள் கூட்டத்தை நோக்கிச் சுட ஆரம்பித்ததில் 16 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர்.

துப்பாக்கி சூடு நடத்திய 2 நபர்களும் தற்போது பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த அனைவரின் விவரங்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை அவுஸ்திரேலியா தனி நாடாக ஏற்றுக் கொண்டதே சிட்னி போண்டி கடற்கரையில் நடந்த இந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணி என்று இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் மறுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய, அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ், தனிநாடு அங்கீகாரத்திற்கும், கடற்கரை தாக்குதலுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை, பல்வேறு உலக நாடுகள் இருநாடுகள் தீர்வை தான் முன்மொழிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயத்தில் இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குறிப்பாக பாதிக்கப்பட்ட யூத சமுகங்களுடன் துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.