விம்பிள்டன் டென்னிஸ்: நடால்- ஹெலப் காலிறுதிக்கு முன்னேற்றம்!

05.07.2022 09:40:10

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் மற்றும் ரோமேனியாவின் சிமோனா ஹெலப் ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

 

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், நெதர்லாந்தின் போடிக் வான் டி ஸாண்ட்ஸ்சுல்ப்பை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், ரபேல் நடால், 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஸ்பெயினின் பாலா படோசாவுடன் மோதினார்.

இப்போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.