நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
10.10.2021 13:19:21
கிளிநொச்சி – தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, இன்று (10) காலை 10 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது
அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.