ஸ்டாலின் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறார் !

20.05.2021 09:40:29

 

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து  கோவை செல்லும் அவர்,  அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

இதனையடுத்து மதியம் 1.30 மணிக்கு கோவை சுற்றுலா மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு கொரோனா பணிகளை ஆய்வு செய்யவுள்ளார்.

தொடர்ச்சியாக அங்கிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் நாளை காலை 9.45 மணியளவில் அங்கு நடைபெறும் ஆய்வு கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனையடுத்து இரவு 7.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.