சிலம்பரசன் உடன் இணைந்து பாடிய சிவாங்கி

09.10.2021 14:55:35

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக அறிமுகமான சிவாங்கி தொடர்ந்து விஜே, நடிகை என பல அவதாரங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதே சமயம் பாட்டு பாடுவதிலும் கவனம் செலுத்தி வரும் சிவாங்கி கவர் சாங்க்ஸ் மற்றும் ஆல்பம் சாங்க்ஸ்களில் தொடர்ந்து பாடி வருகிறார்.

இந்நிலையில் அவர் சினிமாவில் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இயக்குனர் ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாயன். இந்த படத்தில் ஹீரோவாக வினோத் மோகனும் ஹீரோயினாக பிந்து மாதவியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம் பெற்ற மச்சி என்ற பாடலை தான் சிலம்பரசனும் சிவாங்கியும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.