அமெரிக்காவில் கொரோனா ; பவுசி எச்சரிக்கை

02.08.2021 09:45:39

அமெரிக்க நோய்தடுப்பு நிபுணர் ஆண்டனி பவுசி சமீபத்தில் ஏபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது பல்வேறு தடுப்பு மருந்துகள் 50 மாகாணங்களில் உள்ள குடிமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவின் பல ரகங்கள் அமெரிக்காவில் உலவி வந்தாலும் அமெரிக்கா தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவே வெளி உலகம் நினைக்கிறது. ஆனால் ஆண்டனி வைரஸ் தாக்கம் குறித்து தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஆண்டனி சில வலிகளும் கடினமான தருணங்களும் இன்னும் நீங்கவில்லை என்று கூறினார். கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டு குளிர்காலத்தில் சந்தித்ததுபோல மிக மோசமான நிலையை அமெரிக்கா மீண்டும் சந்திக்காது என நம்புகிறேன். இனிவரும் காலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அவ்வளவாக இருக்காது. இரு டேஸ் தடுப்புமருந்து இன்னும் முழுமையாக செலுத்தப்படாத அமெரிக்க குடிமக்களால் வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் இருக்கும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 7 நாட்களில் சராசரியாக வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தடுப்பு மருந்தை முழுவதுமாக செலுத்திக்கொண்டவர்களைப் பற்றி கவலையில்லை. ஆனால் தடுப்பு மருந்து செலுத்தாதவர்கள் இன்னும் அபாய கட்டத்திலேயே உள்ளனர்.
எந்த ஒரு தடுப்பு மருந்தும் 100 சதவீத பலன் அளிக்கும் என்று கூற முடியாது. பல அமெரிக்க குடிமக்களுக்கு அறிகுறி இல்லாத வைரஸ் தாக்கம் உடலில் இருந்து வருகிறது. இது அபாயகரமானது. இதனால் மரணங்கள் அதிகரிக்கலாம்.இவ்வாறு ஆண்டனி பவுசி பேசினார்.