சுகாதார அமைப்பு எச்சரிக்கை

30.11.2021 08:18:14

தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசால் ஏற்படும் ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உருமாறிய புதிய ஒமைக்ரான் வைரஸ் குறித்து, தென் ஆப்ரிக்கா முதல் முதலாக தெரிவித்தது. இதையடுத்து, அது குறித்து, உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்தது. 'பி.1.1.529 எனப்படும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கவலைக்குரியதாக உள்ளது' என, முதலில் தெரிவித்தது.இந்நிலையில் சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

ஒமைக்ரான் வகை வைரஸ் உலக அளவில் மிக அதிக ஆபத்தானதாக இருக்கும் அபாயம் உள்ளது. ஒமைக்ரானால் மற்றொரு அலை உருவானால், அதன் தாக்கம், வீரியம் மிகவும் அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது.இந்த புதிய வகை வைரஸ் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. அது எந்த அளவுக்கு வீரியமானது, எவ்வளவு வேகமாக பரவக் கூடியது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இருப்பினும் இதுவரை, இந்த வைரசால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாதது ஆறுதலாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.