பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம்- ஓபிஎஸ்

07.08.2023 10:27:38

கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் பெற வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற்று தராததினால் தற்போது தஞ்சையில் நெற்பயிர்கள் கருகி உள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். மேலும் படிக்க மதுரை: மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது தஞ்சை டெல்டா பகுதியில் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு காரணம் தமிழக அரசு தான். கர்நாடகாவில் இருந்து ஜூன் மாதம் பெற வேண்டிய 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக பெற்று தராததினால் தற்போது தஞ்சையில் நெற்பயிர்கள் கருகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். மத்திய அரசு பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கி உள்ள ரூ.1500 கோடியை தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகைக்காக பயன்படுத்தி இருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ராஜ்மோகன் உள்பட பலர் இருந்தனர்.