செந்தில் பாலாஜிக்கு செக்!.
திமுக முன்னாள் அமைச்சர் தற்போதைய கோவை எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது அரசு வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக அவரின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி விசாரிக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. அதாவது திமுக அரசு அனுமதி கொடுக்காததால் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறவில்லை.
இந்நிலையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பதற்கான ஆதாரங்கள், ரகசிய குறிப்புகளுடன் அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு தற்போது கடிதம் எழுதியிருக்கிறது. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக்குமார் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மாநில அரசு அனுமதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இதுவரை துவங்கப்படாமல் இருந்தது. தற்போது ஆட்சி மாறிவிட்டதால் செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருக்கிறது..
தற்போது செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக ஆட்சி இல்லை என்பதாலும் தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதாலும் தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் அமலாக்கத்துறைக்கு அனுமதி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் விரைவில் துவங்கும் என கணிக்கப்படுகிறது..