300 வது படத்தில் நடிக்கும் யோகி பாபு!
02.01.2026 12:35:07
|
நடிகர் யோகி பாபு காமெடியனாக ஏராளமான படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்கிறார். ஆனால் நான் எப்போதும் காமெடியன் தான் என பேட்டிகளில் மட்டுமே பேசுவார் யோகி பாபு. கடந்த பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நம்பர் 1 காமெடியனாக யோகி பாபு தான் வலம் வருகிறார். பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் அவர் காமெடியனாக நடித்து வருகிறார் அவர். |
|
இந்நிலையில் யோகி பாபு 300 படங்கள் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கிறார். அவரது 300 படத்திற்கு அர்ஜுனன் பேர் பத்து என டைட்டில் வைத்து இருக்கின்றனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார். |