அயர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை தென்னாபிரிக்கா கைப்பற்றியது !
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.
பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்கா அணி, 02 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி அயர்லாந்து அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இருப்பினும் அயர்லாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனால் 49 ஓட்டங்களினால் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 72 ஓட்டங்களை அடித்த தென்னாபிரிக்கா அணியின் தலைவர் டெம்பா பவுமா தெரிவு செய்யப்பட்ட அதேவேளை தொடரின் நாயகனாக டேவிட் மில்லர் தெரிவு செய்யப்பட்டார்.