வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..

24.07.2022 10:59:59

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் “ரத்தம்”. இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது ரத்தம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழ்ப்படம் என்ற படத்தை இயக்கி பிரபலமானார்.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

ரத்தம் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் வித்தியாசமான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.