காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிப்பு !

08.07.2021 10:15:30

காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குல்காம் மாவட்டத்தின் ஸோடர் என்ற இடத்தில் லக்ஷர்  இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது மற்றுமொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டுள்ளார்.

அதேநேரம் புல்வாமாவின் புசால் என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஒரு தீவிரவாதியும், மேலும் ஒரு தீவிரவாதி நேற்று மாலையும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்தே 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.