ஈரான் கடற்பகுதி எங்கள் கட்டுப்பாட்டில்!
ஈரான் அணு ஆயுத நாடாக மாறிவிடக்கூடாது என பயந்த அமெரிக்கா அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என எச்சரித்தது. ஆனால், ஈரான் அரசு அதை ஏற்கவில்லை. இதையடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் நாட்டை தக்க துவங்கியது. போர் தொடங்கிய 2வது நாளே இஸ்ரேல் தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்.
இதனால் கோபமடைந்த ஈரான் இஸ்ரேல் நாட்டின் மீதும், அமெரிக்காவுக்கு உதவி வரும் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத், அபுதாபி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தாக்குதல் நடத்தியது. அதில், பல எண்ணெய் கிடங்குகள் சேதமானது. மேலும், ஈரான் தனது கடல்வழிப்பாதையான ஹோர்மூஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் வருவது தடுக்கப்பட்டது.
இதன்காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களிலும் பல ஹோட்டல் கடைகள் மூடப்பட்டது.
ஒருபக்கம் ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்க நடத்தி வருகிறது. ஹோர்மூஸ் நீரிணியை திறக்கவேண்டும் என்கிற நிபந்தனையோடு ஈரானும், அமெரிக்காவும் இரண்டு வாரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஆனாலும், ஹோர்மூஸ் நீரிணியை ஈரான் திறக்கவில்லை.
ஒருபக்கம், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஏனெனில், ஈரான் அணுசத்தி உற்பத்தி செய்யக்கூடாது என்கிற அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை. எனவே, எப்போது ஈரான் போர் முடிவுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவி வருகிறது..இந்நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை கைப்பற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது. ஹோர்மூஸ் நீரிணை அருகில் அமெரிக்கா கப்பல்கள் வலம் வந்துகொண்டிருக்கிறது. அங்குள்ள ஈரான் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதலும் நடத்தி வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஈரானிய கடற்பரப்பு முழுவதையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். நாங்கள் முற்றுகையிட்டுள்ள பகுதிக்குள் ஈரானிய கப்பல்கள் நுழைந்தால் தக்கி அழிப்போம்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கடற்கொள்ளை என வர்ணித்துள்ள ஈரான் இந்த சட்டவிரோதப் போரால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் என எச்சரித்துள்ளது.