நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கடைகள் முற்றாக சேதம்

13.08.2021 06:57:49

நுவரெலியா- நோட்டன் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (12) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் மண்சரிவு காரணமாக கடையில் இருந்து தளபாடங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி உட்பட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை நோட்டன் பிரதான வீதியிலுள்ள பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகின்றமையினால், குறித்த வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு நோட்டன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.