க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை மே மாதத்தில்..

31.03.2021 09:00:22

அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை மே 18 முதல் 31 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அத்தோடு குறித்த பாடங்களுக்கான உரிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 01 முதல் 10 வரை 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெற்றது.

4,513 பரீட்சை நிலையங்களில் சுமார் 622,000 பரீட்சத்திகள் க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.