விறுவிறுப்பாக நடந்த பெனால்டி ஷூட் அவுட்...

12.08.2021 09:43:30

UEFA சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் வில்லாரியலை வீழ்த்தில் சாம்பியனாக முடிசூடியது செல்சியா.

வடக்கு அயர்லாந்தில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த UEFA சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன்ஸ் லீக்கின் தற்போதைய சாம்பியனான பிரிட்டிஷ் கிளப் செல்சியாவும், யூரோபா லீக் வென்ற அணி ஸ்பெயின் கிளப் அணியான வில்லாரியலும் மோதின.

90 நிமிடங்கள் முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் போட்டி 1-1 என சமனில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட் நடந்தது.

பெனால்டி ஷூட் அவுட்டில் 6-5 என்ற கோல் கணக்கில் வில்லாரியலை வீழ்த்தில் சாம்பியனான முடிசூடியது செல்சியா.