நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

31.07.2025 05:10:00

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் 1000 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய மோசடி வழக்கில் டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் எனும் சீனிவாசன் மீது 6 மோசடி வழக்குகள் உள்ளன.

இதேவேளை, 2018ம் ஆண்டு முதல் அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார்.

நீதிமன்றத்தால் 2 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி பொலிஸாரால் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி செய்த பணத்தை திரைப்படம், சொந்த செலவுக்காக பவர் ஸ்டார் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.