பிரதமர் பதவி விலக வேண்டும்!
|
அரசாங்கம் தரம் 6 புதிய கல்வி மறுசீரமைப்பை வாபஸ்பெற்றுக்கொண்டது போன்று முதலாம் தரத்தின் மறுசீரமைப்பையும் வாபஸ்பெற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரம் பிரதமருக்கு கல்வி அமைச்சை கொண்டு செல்வதற்கான இயலுமை இல்லை. அதனால் அவர் பதவி விலகவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
|
|
சிவில் அமைப்புகள் மற்றும் கூட்டு தொழிற்சங்கங்களின் ஒன்றியம் புதன்கிழமை (14) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அரசாங்கம் கொண்டு வந்த கல்வி மறுசீரமைப்பில் ஒரு பகுதியை தற்போது வாபஸ்பெற்றுக்கொண்டுள்ளது. அதன் மூலம் நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் சற்று ஆருதல் கிடைத்திருக்கிருக்கும் என நாங்கள் நம்புகிறோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் என்றவகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி மறுசீரமைப்பொன்றை கொண்டுவந்தார். கல்வி மறுசீரமைப்பு மாத்திரமல்ல எந்த மறுசீரமைப்பை கொண்டுவருவதற்கும் இந்த அரசாங்கத்தில் அதற்கு தகுதியானவர்கள் யாரும் இல்லை. இவர்கள் ஆட்சிக்கு வரும்போதே அவர்களின் கல்வி தரம் குறித்து பொய் சொல்லியே வந்தார்கள்.அரசாங்கத்தில் சில அமைச்சர்கள் வீதியில் இருக்கும் குழிகளுக்கு மண் நிறைப்பதை கண்டோம். அதேபோன்று இரண்டாம் மாடிக்கு அடிக்கல் இடுவதை கண்டாேம் இவர்கள் இதற்குத்தான் தகுதியானவர்கள். இவ்வாறானவர்களுக்கு கல்வி மறுசீரமைப்பு போன்று பாரதூரமான விடயங்களுக்கு கையடிக்க முடியாது.எங்களால் முடியும் என்றே பிரதமர் ஹரிணி கல்வி மறுசீரமைப்பில் கைவைத்தார். இறுதியில் அவர்களாலே அதனை வாபஸ்பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கில பாடத்தொகுப்பில் ஆபாச வலைத்தல முகவரியை பதிவிட்டு, பின்னர் அது சர்ச்சைக்குள்ளாகும்போது, மஹாநாயக்க தேரர்களை சந்தித்தித்து, அவ்வாறான ஆபாச வலைத்தலங்கள் பதிவிடப்பட்டிருந்தாலும் அந்த வலைத்தலத்துக்கு பிரவேசிக்குமாறு எங்கும் குறிப்பிடப்பிடவில்லை என தெரிவித்து, அதனை நியாயப்படுத்தவும் இவர்கள் முயற்சித்தார்கள். என்றாலும் நாட்டுக்குள் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அரசாங்கத்துக்கு அதனை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆபாச வலைத்தலம் எவ்வாறு பதிவிடப்பட்டது என்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதனை மேற்கொண்ட நபர் இனம் கணப்படடுள்ளதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். அப்படியானால் அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. அரசாங்கம் அந்த நபரை வெளிப்படுத்த வேண்டும். ஓர் பாலினத்துக்கு ஆதரவளிக்கும் குழுக்கள் இருக்கின்றன.. அவர்களின் உரிமைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அதனை எமது நாட்டின் கல்விக் கொள்கையில் புகுத்த இடமளிக்க முடியாது. இந்த ஆபாச வலைத்தலம் பாடப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட விடயம் அதிகாரிகளால் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டது அல்ல. மாறாக இந்த அரசாங்கத்தி்ன் பிரதிநிதிகள் சிலரும் இருக்கின்றனர். இது அவர்களின் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் கடந்தகால நடவடிக்கைகளின் மூலம் தெளிவாகிறது அதனால் பிரதமருக்கு கல்வி அமைச்சை வகிப்பதற்கான தகுதியில்லை. அதனால் அவரை கல்வி அமைச்சில் இருந்து நீங்கி, தகுதியான ஒருவரை நியமிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றார். |