சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான பயணத்தடை நீட்டிப்பு !
01.07.2021 09:50:07
கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிசிஏ எனப்படும் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் சர்வதேச பயணிகள் விமானங்கள் இயக்குவதற்கு ஜுன் மாதம் 30 வரை விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கட்டுப்பாடுகள் சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்குப் பொருந்தாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.