இருநாடுகளும் துருப்புக்களை விலக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்!

11.02.2021 10:16:25

கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் துருப்புக்களை விலக்கும் நடவடிக்கையை மிகுந்த முன்னெச்செரிக்கையுடன் மேற்கொண்டு வருவதாக சீன பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து சீன பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஊ கியான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள  பதிவில்  மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரியின், வடக்கு, மற்றும் தெற்கு கரைப் பகுதிகளில் முன்கள படை பிரிவினரை படிப்படியாக விலக்கிக் கொள்ளும் பணி ஆரம்பமாகியுள்ளது.

எவ்வித பாதகமான செயலுக்கும் இடம்கொடாத வகையில் இந்த பரஸ்பர படைவிலக்கம் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நமது இந்திய பாதுகாப்புத்துறை அல்லது வெளியுறவுத்துறை சார்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.