நாடு கடத்தினால் நிரவ்மோடி தற்கொலை செய்துகொள்வார்

22.07.2021 10:40:03

தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலை செய்துள்ளார். அதிலிருந்து நிரவ்மோடி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும் அவர் முறையாக பெறவில்லை.

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்வார்’ எனத் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபரான நிரவ்மோடி மற்றும் மெஹுல் சோக்சி, ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இருந்து 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினர்.

பின் அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளனர். லண்டன் சென்றுள்ள நிரவ் மோடி அங்கு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை நாடுகடத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த மேன்முiறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், நிரவ் மோடியின் வழக்கறிஞர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.