ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்

17.01.2023 15:15:21

பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆறாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு நாளை புதன்கிழமை (18) ஆரம்பிக்கின்றது.

நாளைய தினம் காலை 09.00 மணிக்கு அங்குரார்ப்பண நிகழ்வுடன் கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் ஆரம்பிக்கும் இம்மாநாடு, நாளை மறுநாள்(19) இணையவழி அமர்வுடன் நிறைவெய்தவுள்ளது.

தமிழார்வலர்கள் அனைவரையும் மாநாடு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.