யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம்!
31.10.2025 13:27:59
|
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இலக்கம் 58, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் குறித்த அலுவலகம் அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்படவுள்ளது. |
|
இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அந்தக் கட்சியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |