முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

23.11.2024 09:36:38

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.