
சிம்புவுடன் இணையும் சாய்பல்லவி?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் 49-வது படத்தில் நடிகை சாய்பல்லவி இணையவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சிம்புவின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல’ ஆகிய 3 திரைப்படங்களும் சிம்புவுக்கு வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன.
இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைப்’ திரைப்படத்திலும் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஜூன் 5-ம் திகதி வெளிவரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிம்புவின் 49ஆவது திரைப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்பு கல்லூரி பேராசிரியர் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் எனவும் இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.