மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசி: ஆப்பிரிக்க சிறுவர்களுக்கு வழங்கல்

07.10.2021 06:34:17

உலகில் முதன்முறையாக மலேரியா தடுப்பூசிகள், ஆப்பிரிக்க சிறுவர்களுக்கு செலுத்தப்படவுள்ளன.

மலேரியா காய்ச்சலை தடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியினை 2019 ஆம் ஆண்டு கானா, கென்யா, மலாவி ஆகிய நாடுகளில் அதன் செயல்திறன் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் பெறுபேற்றின் அடிப்படையில் மொஸ்க்ரியுக்ஸ் (Mosquirix) என்ற மலேரியா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு உலக சுதாகார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது.

இந்தத் தடுப்பூசியானது முதன் முறையாக, ஆப்பிரிக்க சிறுவர்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரொஸ் அத்னோம் கேப்ரியஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

மலேரியா காய்ச்சல் காரணமாக 2019 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 260,000 சிறுவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.