ஜேர்மனியின் புதிய சுகாதார செயலாளராக பிரபல விஞ்ஞானி நியமனம் !
ஜேர்மனியின் புதிய சுகாதார செயலாளராக பிரபல விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொற்றுநோயின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்த பிரபல விஞ்ஞானியும், தொற்றுநோயியல் நிபுணருமான Karl Lauterbach ஜேர்மனியின் புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏஞ்சலா மெர்க்கலுக்கு பிறகு ஜேர்மனியின் அதிபராக பதவியேற்கவிருக்கும் Olaf Scholz, Karl Lauterbach-ஐ ஜேர்மனியின் புதிய சுகாதார செயலாளராக தேர்ந்தெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிறிஸ்மஸ் காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்று கேட்டதற்கு, Karl Lauterbach கூறியதாவது, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே முக்கிய நோக்கம்.
அதனால் மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பயணக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என கூறினார்.
தொடர்ந்து புதிததாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு ஜேர்மனி சமீபத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தடுப்பூசி போடாதவர்களை குறிவைத்து அமுல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களை முற்றிலுமாக முடக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், தடுப்பூசி போட்டவர்கள் பொது இடங்களுக்கு சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.