நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்.

20.09.2026 13:40:59

திரைப்படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி, இன்று (20) அதிகாலை காலமானார். 

தற்போது அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற ‘தங்கப்பதக்கம்’ (1974) திரைப்படத்தின் தயாரிப்பில் முக்கிய பங்களிப்பாற்றிய சாந்தி, தனது பெயரில் சென்னையின் மவுண்ட் ரோட்டில் இயங்கிய சாந்தி தியேட்டர் மூலம் ரசிகர்களிடையேயும் அறியப்பட்டவர். 

1968ஆம் ஆண்டு நாராயணசாமியை திருமணம் செய்துகொண்ட அவர், பின்னர் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார். 

அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.