கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை

24.12.2020 16:48:06

* கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை.

 

* அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும்

 

* கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும்

 

 

* சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களை தவிர தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, கூட்டத்தை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது

 

* அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

 

* கிராமசபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன 

 

* சட்ட விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமன்றி கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது

 

* ஊரகப் பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராம முன்னேற்றம் காண வழி வகுக்கிறது கிராமசபை

 

என தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.