
இந்தியர்களுக்கு அமெரிக்க விசா திட்டம்!
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்களுக்கான புதிய வழிமுறையாக O-1 விசா தற்போது பெரும் பிரபலமடைந்துள்ளது. இது H-1B விசாவுக்குப் பதிலான வலுவான மாற்றாக உருவெடுத்து வருகிறது. 1990 அமெரிக்க குடிவரவுச் சட்டத்தின் (Immigration Act of 1990) கீழ் உருவாக்கப்பட்ட O-1 விசா, அசாதாரண திறமை (extraordinary ability) கொண்ட நபர்களுக்கானது. விசா பெறுவதற்கு நபர் 8 தகுதி அளவுகோள்களில் குறைந்தது 3 புள்ளிகளில் தகுதியுடையவராக இருக்க வேண்டும். இது முக்கிய விருதுகள், அத்தாட்சிப்படுத்தப்பட்ட கட்டுரைகள், கணிசமான பங்களிப்புகள் போன்றவை ஆகும். |
O-1 விசாவின் முக்கிய சிறப்பம்சங்கள்: H-1B போல லொட்டரி இல்லை 93% விசா ஒப்புதல் விகிதம் முதல் முறை 3 ஆண்டுகள் செல்லுபடியாகும், பின்னர் அளவில்லா விரிவாக்கம் குறைந்தபட்ச சம்பள தேவையும் இல்லை 10 நாட்களில் விரைவு செயலாக்கம் இந்தியர்களின் வளர்ச்சி 2020-ல் 487 O-1A விசா பெற்ற இந்தியர்கள், 2023-ல் இது 1,418 ஆக உயர்ந்துள்ளது. இது 191% வளர்ச்சியாகும். AI ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், கலைஞர்கள் மற்றும் STEM துறையினர் இதை அதிகம் பயன்படுத்துகிறார்கள். Tesla, Google போன்ற நிறுவனங்கள் O-1 விசா வழியாக இந்தியர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. Harvard, Yale போன்ற பல்கலைக்கழகங்களும் இதையே பயன்படுத்துகின்றன. பலருக்கு, முக்கியமான பத்திரிகைகளில் பிரசுரம், பேட்டிகள், காப்புரிமைகள் ஆகியவை விண்ணப்பத்தை வலுப்படுத்த உதவுகின்றன. ஒரு O-1A விசா பெறுவதற்கு $10,000-$30,000 வரை செலவாகலாம். ஆனால், பல முறை H-1B லொட்டரியில் தோல்வியடைந்த இந்தியர்கள் இதை ஒரு நம்பகமான வழியாக பார்க்கிறார்கள். O-1A விசாக்கள் வருடத்திற்கு சுமார் 10% வளர்ச்சி காண்கின்றன. அமெரிக்க தொழில்நுட்ப போரில், உலகளாவிய திறமையை பிடிக்க இந்த விசா முக்கியமான ஆயுதமாக மாறியுள்ளது. |